உள்ளடக்கத்திற்குச் செல்
கணக்குப் பாதுகாப்பை எப்படி மேம்படுத்துவது?

கணக்குப் பாதுகாப்பை எப்படி மேம்படுத்துவது?

உங்கள் ஆன்லைன் பாதுகாப்பைப் பெரிதும் மேம்படுத்தும் நல்ல பழக்கங்கள்

பின்வரும் வழிமுறைகளுடன் பாதுகாப்புச் சரிபார்ப்பு செய்யுங்கள்.

  1. வலுவான, தனித்துவமான கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள். ஒரே கடவுச்சொல்லைப் பல இணையதளங்களில் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
  2. உங்கள் கணக்கை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.
  3. கூடுதல் அங்கீகாரமாகக் கடவுக்குறியீட்டை (4 இலக்கங்கள்) அமையுங்கள்.
  4. உங்கள் மொபைல் எண்ணைக் கணக்கில் சேருங்கள்.
  5. உங்கள் மின்னஞ்சலுக்கான அணுகலை இழந்து, கணக்கை மீட்க எங்களைத் தொடர்புகொள்ளும்போது இது உதவியாக இருக்கும்.
  6. அங்கீகரிக்கப்படாத அணுகல் ஏதேனும் உள்ளதா என்று பார்க்க, கணக்குப் பகுதியில் உள்ள “கடைசி கணக்குச் செயல்பாடு”-ஐ அவ்வப்போது சரிபாருங்கள்.
  7. சில மாதங்களுக்கு ஒருமுறை கடவுச்சொற்களை மாற்றுங்கள். உங்கள் மின்னஞ்சலும் தொடர்புடைய இணையதளக் கணக்குகளும் இணையக் குற்றவாளிகளிடம் கசிந்துள்ளனவா என்று பாருங்கள். (1) https://haveibeenpwned.com (2) https://monitor.firefox.com